×

பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்திற்கான பயண போக்குவரத்து செலவுகளை மத்திய அரசு செய்ததா? மாநில அரசு செய்ததா? : ஆர்டிஐ கீழ் கேள்வி

டெல்லி : “திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியிலானதா?” என்று ஆர்டிஐ மூலம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19, 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார்.20ம் தேதியன்று சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 21ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மறுநாள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிப்பட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் திருச்சி, ராமேஸ்வரம் பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியானதா? என பிரதமர் அலுவலக பொது தகவல் அதிகாரிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பித்தில், பிரதமரின் பயணம் தனிப்பட்ட முறையிலானது என்றால் அவர் பயணித்த விமானம், ஹெலிகாப்டர், கார்களுக்கான செலவுகளை மத்திய அரசு செய்ததா? மாநில அரசு செய்ததா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தனிப்பட்ட பயணம் என்றால் எந்த கட்டணமும் செலுத்தாமல் அரசு வாகனங்களை எந்த விதிகளின் கீழ் பிரதமர் பயன்படுத்தினார்? தனிப்பட்ட பயணமாக இருந்தால், போக்குவரத்து செலவுகளை பிரதமரிடம் இருந்து வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளதா? சாதாரண பொதுமக்களும் கோவில்களுக்குச் செல்ல இதுபோல அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா? என்று கேள்விகளை எழுப்பிய நிலையில், பிரதமரின் போக்குவரத்து செலவு குறித்து விளக்கம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

The post பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்திற்கான பயண போக்குவரத்து செலவுகளை மத்திய அரசு செய்ததா? மாநில அரசு செய்ததா? : ஆர்டிஐ கீழ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Prime Minister Modi ,Delhi ,Modi ,Trinchi Srirangam ,Rameshwaram ,RDI ,Chennai ,High Court ,Attorney ,S. Duraisami ,Prime Minister Narendra Modi ,Srirangam ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...