×

இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்..!!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியதாவது, இந்திய அரசின் விருது பெற்ற திரையிசைப் பாடகரும், பெண் இசையமைப்பாளராகப் பல படங்களில் பணியாற்றியவரும், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளுமான பவதாரிணி அவர்கள் இளம் வயதில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும். தன்னுடைய குரலாலும், இசையாலும் தனித்த திறமையாளராகப் புகழ்பெற்ற அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது தந்தையார் இசைஞானி இளையராஜா, சகோதரர்கள், வாழ்விணையர் ஆகியோருக்கும் குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Dravidar Kazhagam ,president ,K. Veeramani ,Ilayaraja ,Bhavatarini ,Chennai ,Bhavadarini ,Indian ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...