×

என்எல்சி சார்பில் கட்டப்பட்டது அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு

*அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

நெய்வேலி : என்எல்சி இந்தியா நிறுவனம் தனது தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில், ரூ.2.50 கோடி மதிப்பில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்எல்சி நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் நலனுக்காக லிப்ட் கொண்ட இரண்டு தளங்களை கொண்டுள்ளது.

தரைத் தளத்தில் நோயாளிகளுக்கான வார்டுகள், பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், வரவேற்பறை மற்றும் எக்ஸ்ரே அறை, ஆபரேஷன் தியேட்டர், ஐசியு, அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிகளுக்கான சிவப்பு மண்டலம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி கூறுகையில், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள 53 பஞ்சாயத்துகளில் உள்ள 141 சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்களுக்கு இந்த புதிய வசதி மூலம் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியான அவசர சிகிச்சைக்கு செல்வதைத் தவிர்த்து நேர விரயத்தை குறைக்கலாம், என்றார்.

The post என்எல்சி சார்பில் கட்டப்பட்டது அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு appeared first on Dinakaran.

Tags : Emergency Department ,Government ,NLC ,Minister ,MRK. ,Panneerselvam ,Neyveli ,NLC India ,Kurinchipadi Government Hospital ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...