×

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் உட்பட 2 பேர் கடலில் மூழ்கி பலி

*கும்பகோணத்தில் சோகம்

தரங்கம்பாடி : திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் உள்பட 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மணமகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செக்கடிதெருவை சேர்ந்த குமார் மகள் நிவேதா(19). கும்பகோணம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த இவருக்கும், கும்பகோணம் வீரபத்திரகோயில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் நவீன்குமார் (23) என்பவருக்கும் நேற்றுமுன்தினம் திருமணம் நிச்சயதார்த்தம் கும்பகோணத்தில் நடந்து. இந்நிலையில் நேற்று கும்பகோணத்தில் இருந்து மணமக்கள் உள்பட உறவினர்கள் 25 பேர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சுற்றுலா வந்தனர்.

பின்னர் அனைவரும் கடலில் குளிக்க சென்றனர். அப்போது மணமக்கள் நவீன்குமார், நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயணபுரத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் சரவணன் (12) ஆகியோரை கடல் அலை இழுத்து சென்றது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் மற்றும் கடலில் குளித்துகொண்டிருந்த சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கடற்கரையில் இருந்த மீனவர்களும், கடலோர பாதுகாப்பு போலீசாரும் கடலில் இறங்கி 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதில் நவீன்குமாரும், சரவணனும் உயிரிழந்ததும், நிவேதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை உடனடியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிரிழந்த 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நவீன்குமார் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை நெகிழ வைத்தது. இதுகுறித்து தரங்கம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் உட்பட 2 பேர் கடலில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Tharangampadi ,Kumbakonam ,Kumar ,Nivetha ,Kumbakonam Sekkaditheru, Thanjavur district ,Kumbakonam College ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...