×

அயோத்திக்கு ஹனிமூன் அழைத்து சென்ற கணவன்: டைவர்ஸ் கேட்டு மனைவி நோட்டீஸ்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் கோவாவுக்கு பதிலாக அயோத்தி -வாரணாசிக்கு கணவன் ஹனிமூன் அழைத்து சென்றதால் கோபமடைந்த மனைவி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம், போபால் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கடந்த மே மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது. அந்த நபர் ஐடி துறையில் பணியாற்றி வருகின்றார். இளம்பெண்ணும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். இருவரும் அதிக வருமானம் ஈட்டி வருவதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து திருமணத்துக்கு பிறகு வெளிநாட்டிற்கு ஹனிமூனுக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் அந்த பெண் கூறியுள்ளார்.ஆனால் வெளிநாடு தேவையில்லை கோவா அல்லது வேறு எங்காவது செல்லலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த நபர் அயோத்தி-வாரணாசிக்கு ஹனிமூன் சென்று வரலாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பயணத்துக்கு அவரது குடும்பத்தினரையும் உடன் அழைத்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் அதிருப்தி அடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர்களது வழக்கு கவுன்சிலிங் நிலையில் நிலுவையில் உள்ளது.

The post அயோத்திக்கு ஹனிமூன் அழைத்து சென்ற கணவன்: டைவர்ஸ் கேட்டு மனைவி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Bhopal ,Madhya Pradesh ,Ayodhya-Varanasi ,Goa ,Bhopal, Madhya Pradesh ,
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி