×

பழங்காலத்தில் மனிதன் 900 ஆண்டுகள் வாழ்ந்தான்: சர்ச்சை கருத்து கூறிய ரஷ்ய அறிவியலாளர் பதவி நீக்கம்

மாஸ்கோ: பழங்காலத்தில் மனிதன் 900 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். முன்னோர்களின் பாவம் காரணமாகவே மனிதர்களின் ஆயுள் குறைந்தது என சர்ச்சை கருத்து கூறிய அறிவியலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் வவிலோவ் மரபியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அலெக்சாண்டர் குத்ரியாவ்ட்சே, கடந்த 2023ம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் 900 ஆண்டுகள் வரை வாழ்ந்தனர். அவர்களின் தனிப்பட்ட பாவங்கள், முன்னோர்கள் செய்த பாவங்கள் காரணமாக தற்கால மனிதர்களின் ஆயுள் காலத்தை குறைக்கும் நோய் தொற்றுகளை ஏற்படுத்தியது. முன்னோர்கள் செய்த பாவம் அவர்களின் ஏழு தலைமுறை பாதிப்பை ஏற்படுத்தும்” என்று இவ்வாறு பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சையையும், விவாதத்தையும் எழுப்பியது. இந்நிலையில் மரபியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து அலெக்சாண்டர் குத்ரியாவ்ட்வை நீக்கி ரஷ்ய அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

The post பழங்காலத்தில் மனிதன் 900 ஆண்டுகள் வாழ்ந்தான்: சர்ச்சை கருத்து கூறிய ரஷ்ய அறிவியலாளர் பதவி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Moscow ,Vavilov ,Russia ,Institute of Genetic Research ,
× RELATED இந்திய தேர்தலில் தலையீடா? ரஷ்யா புகாருக்கு அமெரிக்கா மறுப்பு