×

ஜோகோவிச் அதிர்ச்சி

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை 10முறை வென்றவரும். நடப்பு சாம்பியனும், உலகின் நெம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச்(செர்பியா) நேற்று ஆஸி ஓபன் அரையிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார். ஜோகோவிச் எளிதில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல் 2 செட்களை 1-6, 2-6 என எளிதில் இழந்தார். தொடர்ந்து 3வது செட்டை7-6(8-6) என்ற புள்ளிக் கணக்கில் வென்று நம்பிக்கையை உருவாக்கினார். ஆனால் 4வது செட்டை 6-3 என்ற கணக்கில் ஜானிக் கைபற்றினார். அதனால் ஆஸி ஓபனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் முதல் தடவையாக அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஜானிக் முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளார்.

The post ஜோகோவிச் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Djokovic ,Australian Open Grand Slam ,Novak Djokovic ,Serbia ,Italy ,Janic Sinner ,Aussie Open ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்