×

வயதான தந்தையை கவனிப்பது மகனின் கடமை: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தேவகி சாவ்(60) என்ற முதியவர் தனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.தன்னுடைய சொத்தை இருவருக்கும் சமமாக பிரித்து கொடுத்து விட்டேன்.எனவே, மூத்த மகன் மனோஜிடம் இருந்து ஜீவனாம்சம் தரக்கோரி கோடர்மா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனோஜ் அவரது தந்தையின் மாதாரந்திர செலவுக்கு ரூ. 3000 வழங்குவதற்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனோஜ் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் சந்த், பெற்றோரை கவனிப்பது மகனின் கடமையாகும். மகாபாரதத்தில்,யட்சன் தருமரிடம் கேட்டார்;தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது? என்று கேட்டார். அதற்கு தருமர் ஒரு தாயின் மனம் என்றார். ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது என்று கேட்ட போது அவனது தந்தை என தருமர் பதிலளிப்பார். வாதத்திற்காக, தந்தை எதையாவது சம்பாதித்தாலும், வயதான தந்தையை கவனிப்பது அவரது மகனின் கடமை. தந்தை என்பது கடவுள், தாய் இயற்கை.அவர்கள் விதை,நீங்கள் மரக்கன்றாகும் என்று வேதத்தில் உள்ள சொற்களை மேற்கொள் காட்டி கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து மனோஜின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

The post வயதான தந்தையை கவனிப்பது மகனின் கடமை: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand High Court ,Ranchi ,Jharkhand ,Devaki Chau ,Kodarma ,Family Welfare Court ,Manoj.… ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...