×

கேலோ விளையாட்டுபோட்டி: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யபட்டுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டி போட்டியின் ஒரு பகுதியாக கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளதால் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெற இருக்கிறது.

எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞசேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

The post கேலோ விளையாட்டுபோட்டி: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Galo Games ,Chennai East Coast Road ,Chennai ,Kowalam ,Mamallapuram ,Galo India Games ,Galoo Games ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...