×

பட்டுக்கோட்டையில் கராத்தே மாணவர்களுக்கு வண்ணப்பட்டை வழங்கும் விழா

 

பட்டுக்கோட்டை, ஜன.26: பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலடிக்குமுளையில் கராத்தே மாணவ, மாணவிகளுக்கு வண்ணப்பட்டை வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் இலங்கையிலிருந்து வந்த கராத்தே மாஸ்டர் சுரேஷ்குமாரால் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இலங்கை கராத்தே மாஸ்டர் சுரேஷ்குமார் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினார். அப்போது தற்காப்பு பயிற்சிகளை எவ்வாறு மேற்கொள்வது? என ஓடுகளில் பெட்ரோலை ஊற்றி அதில் நெருப்பு பற்றவைத்து அதை கை மற்றும் தலையால் உடைத்தும் காட்டினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் எஸ்.ஐ. புகழேந்தி, டாக்டர் சீனிவாசன், நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அபினேஷ், சமூக ஆர்வலர்கள் விக்னேஷ், அஜீஸ், பகுருதீன், நெப்போலியன் ஆகியோர் வண்ணப் பட்டைகளை வழங்கினர். தொடர்ந்து சமீபத்தில் சாதனை படைத்த கராத்தே மாணவி சுசிஷாலினி பாராட்டி கவுரவிக்கப்பட்டார். பட்டுக்கோட்டை கராத்தே மாஸ்டர் குலாஸ்டாலின் நன்றி கூறினார்.

The post பட்டுக்கோட்டையில் கராத்தே மாணவர்களுக்கு வண்ணப்பட்டை வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Aladikumulai ,Karate Master ,Suresh Kumar ,Sri Lanka ,Students Awarding Ceremony ,
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு