×

பள்ளிப்பட்டு – சென்னை புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

பள்ளிப்பட்டு, ஜன. 26: பள்ளிப்பட்டிலிருந்து சென்னைக்கு புதிய பேருந்து சேவையை சந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளிப்பட்டு சுற்று வட்டார கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் சென்னைக்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே திருமல்ராஜபேட்டையிலிருந்து பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, புச்சிரெட்டிப்பள்ளி, திருத்தணி மார்கத்தில் சென்னைக்கு புதிய பேருந்து சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் தேவன் தலைமை வகித்தார்.

பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பள்ளிப்பட்டு முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவீந்திரநாத், ஒன்றிய கவுன்சிலர் சேகர், ஒன்றிய நிர்வாகிகள் திருமலை லோகநாதன், கோபி, சுகுணா நாகவேலு, பள்ளிப்பட்டு பேரூர் கவுன்சிலர்கள் செந்தில்குமார், விஜயிலு, கபிலா சிரஞ்சிவி, குணசேகரன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

The post பள்ளிப்பட்டு – சென்னை புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,Chennai ,MLA ,Chandran ,Pallipat ,Pallipattu ,Tiruvallur district ,Andhra border ,Pallippattu ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு கோடை...