×

நெக்ஸ்ட் தேர்வை செயல்படுத்த கருத்து கேட்கும் தேசிய மருத்துவ ஆணையம்

புதுடெல்லி: நெக்ஸ்ட் தேர்வு வழிமுறைகள் குறித்த அறிவிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்டது. இதில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு, பொது தகுதித் தேர்வாக நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியானது. 2020ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு முதலில் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது.

பரிந்துரைகளின் அடிப்படையில்,நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்தி,தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சம்மந்தப்பட்டவர்களின் கருத்துகளை வரவேற்பதாக தேசிய மருத்துவ ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் கருத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

 

The post நெக்ஸ்ட் தேர்வை செயல்படுத்த கருத்து கேட்கும் தேசிய மருத்துவ ஆணையம் appeared first on Dinakaran.

Tags : National Medical Commission ,New Delhi ,MBBS ,Dinakaran ,
× RELATED உக்ரைனில் எம்பிபிஎஸ் முடித்தவருக்கு...