×

வீட்டில் துப்பாக்கி, அரிவாள்கள் பறிமுதல் ராக்கெட் ராஜா கூட்டாளி கைது

நெல்லை: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியும், ராக்கெட் ராஜாவின் கூட்டாளியுமான ஜேக்கப் நேற்று நெல்லை தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ராக்கெட் ராஜா வீட்டில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கி, மான் கொம்பு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை அருகே தாழையூத்தை சேர்ந்தவர் ஜேக்கப் (37). ராக்கெட் ராஜா கூட்டாளி. இவர் பாளையங்கோட்டை சிறையில் முத்து மனோ கொலை வழக்கிலும், பிரபல ரவுடி சிந்தா சரவணன் கொலை வழக்கிலும் தொடர்புடையதாக கூறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகவும் இருந்து வந்தார்.

போலீசார் இவரை தேடி வந்த நிலையில், இவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்தன. வள்ளியூர் சரக டிஎஸ்பி யோகேஷ்குமார் தலைமையில், நெல்லை மாவட்ட எஸ்பி.யின் தனிப்படையினர் அங்கு சென்று ஜேக்கப்பை கைது செய்தனர். தொடர்ந்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில், தனிப்படையினர் திசையன்விளை ஆனைக்குடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு போலீசார் சோதனையிட்டபோது ஒரு நாட்டு துப்பாக்கி, மான் கொம்பு, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் துப்பாக்கி, அரிவாள்கள் பறிமுதல் ராக்கெட் ராஜா கூட்டாளி கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Jacob ,Rocket Raja ,Nellai police ,Rocket ,Raja ,
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...