×

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு முனையத்தில் இருந்து 30ம் தேதிக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று மாலை திடீரென ஆய்வு செய்தார். கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளையும் ஆய்வு செய்தார். இதையடுத்து பூங்கா அருகில் ஆம்னி பேருந்துகளுக்காக 7000 சதுர அடி ஒதுக்கப்பட்டுள்ள இடத்தையும், கால் டாக்ஸிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் வருகிற 30ம் தேதிக்கு பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் இயக்கப்படும். ஏற்கனவே பொங்கலுக்கு முன் அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்க தொடங்கிவிட்டன. இதில் ஆம்னி பேருந்துகளும் நேற்று இரவு முதலே இயங்க தொடங்கிவிட்டன. எனவே, பொதுமக்களுக்கு யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். பொதுமக்களும் யாரும் சொல்வதை கருத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டாம். பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் ஓரிரு ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் தேவையின்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்துதான் போர்டிங் செய்ய வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் அனைத்து கடைகளையும் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, போக்குவரத்து மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு முனையத்தில் இருந்து 30ம் தேதிக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Klambakkam ,Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Kalayankar ,Centenary ,Bus ,Terminal ,Klambach ,Dinakaran ,
× RELATED திருவள்ளூரிலிருந்து தாம்பரம் வழியாக...