×

நெல்லை திசையன்விளை அருகே ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை: துப்பாக்கி பறிமுதல்

நெல்லை: திசையன்விளை அருகே ஆனைகுடி கிராமத்தில் ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் மான் கொம்பு, அரிவாள், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 2021-ல் பாளையங்கோட்டை சிறையில் முத்து மனோ என்பவர், மற்ற கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஜேக்கப் என்பவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜேக்கப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராக்கெட் ராஜாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

The post நெல்லை திசையன்விளை அருகே ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை: துப்பாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rocket ,Raja ,Nellai Vekyanvilai ,Nellai ,Rocket Raja ,Anaikudi ,Vektianvilai ,Panangattu Force Party ,
× RELATED ராக்கெட் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு