×

சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை (TN BEAT EXPO-2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை காலை 10.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தென்னிந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் (TN BEAT EXPO-2024) சென்னை வர்த்தக மையத்தில் 26 மற்றும் 27 ஜனவரி 2024ல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னிலை வகுக்கவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை ஏற்கவுள்ளார்கள்.

இக்கண்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட பொருட்கள் 410 அரங்குகளில் வணிக நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகன உதிரி பாகனங்கள், இரசாயனப்பொருட்கள், மின் மற்றும் மின்னணுவியல், வேளாண்மைக் கருவிகள், கட்டுமான தொழில்சார்ந்தவர்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என 187 அரங்குகளும் அரசு பொதுத்துறையை சார்ந்த பூம்புகார் நிறுவனம், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிட்டேட், சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், ஆவின், போன்ற 28 அரங்குகளில் பொது நிறுவனங்களும், 10 அரங்குகளில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றனர்.

வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே நேரடி விற்பனை செய்ய கைவினைப்பொருட்கள் மரஉபயோகப் பொருட்கள், அணிகலன்கள், தரக்கோட்டா பொருட்கள், உணவு மற்றும் குளிர்பானங்கள், இயற்கை உணவு தயாரிப்பு பொருட்கள் போன்றவை 128 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழில்முனைவோர் முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், சுயதொழில் செய்பவர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்த மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

இக்கண்காட்சியினால் ஆதிதிராவிடர் பழங்குயின சார்ந்த தொழில் முனைவோர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் வைத்து தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும், ஒன்றியம் மற்றும் மாநில அரசு பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு பொருட்களை நேரடி கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளையும், தொழில் முனைவோர் புதிய தொழில் துவங்குவதற்கும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறவும், குறு, சிறு தொழிலாளர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான விழிப்புணர்வும்.

தொழில்துறையில் சிறந்து விளங்கும் சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக தலைவர் உ.மதிவாணன் சிறப்புரை ஆற்றவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., வரவேற்புரையாற்றவும், மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, இ.ஆ.ப., நன்றியுரையாற்றயுள்ளார். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayaniti Stalin ,Chennai Trade Centre ,Chennai ,Udayanidhi Stalin ,Adiravidar ,Chennai Trade Center ,
× RELATED இந்தியாவிற்கு நல்ல பிரதமரை...