×

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு: நடிகர் பாபி சிம்ஹா பதில் அளிக்க கோரி சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோர்களிடம் பாபி சிம்ஹா கொடுத்துள்ளார். அதன்பிறகு வீட்டை குறைவான தொகையில் கட்டி வைத்து இருந்தது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்து ஒப்பந்ததாரர்க ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிதாக ஆன காரணத்தால் ஒப்பந்ததாரர்கள் வீட்டை கட்டாமல் பாதியிலேயே சென்று இருக்கிறார்கள். பிறகு இது குறித்து பாபி சிம்ஹா கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் இவர்களுக்கு ஆதரவாக இருந்த உசேன், மகேந்திரன் ஆகியோர் மீது புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதன் பின் காவல்துறையினர் வழக்குப்பதிவும் செய்தனர். அதனை தொடர்ந்து உசேன் பேட்டி ஒன்றில் பேசும்போது பாபி சிம்ஹா என் மீது பொய்யான புகார் அளித்து இருக்கிறார் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கொடைக்கானல் விவகாரத்தில் தன்னை பற்றி பாபி சிம்ஹா தன்னை பற்றி அவதூறு தெரிவித்ததாகவும், தன்னை மிரட்டியதாகவும், காங்கிரஸ் முன்னாள் எம்பி ஆரூணின் சகோதரர் மகன் உசேன் ரூ.1 கோடி கேட்டு வழக்கு மான நஷ்ட வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதில் அளித்து ஆகவேண்டும் என அவருக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு: நடிகர் பாபி சிம்ஹா பதில் அளிக்க கோரி சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai Alandur Court ,Bobby Simha ,Chennai ,Pethparara ,Kodaikanal ,Jamir ,Qasim Mohammed ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!