×

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் நிலையில் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக சார்பில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டுக்குழு, நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பிரச்சார குழு, தேர்தல் விளம்பர குழு என குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து முதல் கட்டமாக இன்று தேர்தல் அறிக்கைக் குழு அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கூடியது. அக்குழுவில் இடம் பெற்றுள்ள தலைமை நிர்வாகிகள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகை செல்வன் ஆகிய 10 பேர் கூடி ஆலோசித்தனர். அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மாநிலத்தின் நலனை மையமாக கொண்டு அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் நலன் சார்ந்ததாக அமையும்.

மக்களின் நாடி துடிப்பு, மக்கள் எண்ணோட்டங்கள், மக்களின் நலன் சார்ந்த அறிக்கையாக அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தினகரன் தனி மரம், அதிமுக ஒரு தோப்பு; அவர் கூறும் கருத்துகளை பெரியதாக பார்ப்பதில்லை. உரிய நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் இவ்வாறு கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Atymukh ,Jayakumar ,Chennai ,Former Minister ,Adamugawa ,Supreme Court ,Constituency Participation Committee ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...