×

கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். 2006-ம் ஆண்டு மாநில அரசுப் பணிக்கு தேர்வான 13,000 ஊளியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சமுக வலைதளப்பக்கத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையானது வெளியிடபட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் பணியாற்ற கூடிய 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தபடும் என தெரிவிக்கபட்டிருந்தது.

புதிய பென்சன் திட்டத்தால் அரசு ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கபடுகின்றனர். அவர்களது ஓய்வூதியத்தை பெறுவதில் பெருமளவில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்திவந்தனர். அதன் அடிப்படையிலேயே தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தது. தற்போது ஆட்சி பொறுப்புக்கு வந்த காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் சித்தராமையா தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தேர்தல் அறிக்கையில், வெளியிட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில், தற்போது முதல்கட்டமாக கர்நாடக மாநிலத்தில் இருக்க கூடிய 13,000 அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தில் இருந்து விலக்கு அளித்து பழைய பென்சன் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்தார். அடுத்தடுத்த கட்டமாக வரக்கூடிய நாட்களில் ஓவ்வொருவரின் தகுதிக்கேற்ப பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு முழுமையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு 84,000 அரசு ஊழியர்களுக்கும் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

The post கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AMMANILA CHIEF ,MINISTER ,CHITARAMAYA ,KARNATAKA ,Bangalore ,Maharashtra ,Chief Minister Siddaramaiah ,Chief Minister ,Siddaramaiah ,State ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட...