×

தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ

சென்னை: தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127-வது பிறந்தநாள் விழாவில் நேதாஜியின் வரலாற்றையே ஆளுநர் சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். எவ்வித வரலாற்று அறிவும் இல்லை என்பதை ஆளுநரின் உரை வெளிப்படுத்தி இருக்கிறது. வரலாறு எல்லாம் ஆர்எஸ்எஸ் தொட்டிலில் வளர்ந்த ஆர்.என். ரவிக்கு தெரிய வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.

The post தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Mahatma Gandhi ,Vaiko ,Chennai ,Madhyamik General Secretary ,Netaji ,Subhash Chandra Bose ,Governor ,Governor RN Ravi ,
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!