×

கேரளாவுக்கு கடத்த முயன்ற 9.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரியுடன் இருவர் கைது

கம்பம், ஜன. 25: குமுளி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 9.5 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டத்தில் போடிமெட்டு, கம்பம்மெட்டு குமுளி வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக உத்தமபாளையம் குடிமைப்ெபாருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் எஸ்.ஐ. சோமசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 8 மணியளவில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு லாரியை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். இதில் அந்த லாரியில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் இருந்த 9500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ரேஷன் அரிசி கடத்த முயன்ற நாராயணதேவன்பட்டி சுருளி ரோட்டை சேர்ந்த கருப்பசாமி மகன் விக்னேஷ் (30) மற்றும் அண்ணாபுரத்தைச் சேர்ந்த சவுந்தரபாண்டி மகன் பாண்டீஸ்வரன் (34) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

The post கேரளாவுக்கு கடத்த முயன்ற 9.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரியுடன் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kampham ,Anti-Smuggling Unit ,Kumuli ,Podimetu ,Theni district ,Dinakaran ,
× RELATED இடுக்கி மாவட்டத்தில் அதிகரிக்கும்...