×

உசிலம்பட்டியில் வீடு புகுந்து திருட்டு

உசிலம்பட்டி, ஜன.25: உசிலம்பட்டியில் வீட்டில் கதவு மற்றும் பிரோவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த மனோஜ்குமார் மனைவி ராஜீ. இவர்,நேற்று காலை பூட்டியிருந்த வீட்டின் கதவுகள் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக ராஜீ, உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post உசிலம்பட்டியில் வீடு புகுந்து திருட்டு appeared first on Dinakaran.

Tags : Usilampati ,Rajee ,Manojkumar ,7th Ward Nagammal Temple Street, ,Usilampati Municipality ,
× RELATED கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் பலி