×

தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு திருவலம் ரயில் நிலையத்தில்

திருவலம், ஜன.25: திருவலம் ரயில் நிலையத்தில் தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் டி.என்.சவுத்ரி நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் ரயில் நிலையத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.என். சவுத்ரி மற்றும் ரயில்வே அதிகாரிகள் நேற்று காலை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது திருவலம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரயில் நிலைய அலுவலகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டமைப்பு பணிகள், ரயில்வே பிளாட்பாரத்தில் சீரமைப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் அறிவுரைகள் கூறியும் அதனை சீரமைப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதில் ரயில் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு திருவலம் ரயில் நிலையத்தில் appeared first on Dinakaran.

Tags : South Zone Security Commissioner ,Thiruvalam railway station ,Thiruvalam ,D. N. Chaudhary ,South Zone Railway ,Safety Commissioner ,D.N. Chaudhary ,South Zone Security ,Commissioner ,Dinakaran ,
× RELATED ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ்...