×

தென்காசி மாவட்டத்தில் ஜன.30ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி,ஜன.25: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்காசி மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நேற்று 24ம் தேதி நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாறாக 30.1.2024 (செவ்வாய் கிழமையன்று) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வைத்து காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post தென்காசி மாவட்டத்தில் ஜன.30ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi district ,Tenkasi ,Farmers Grievance Redressal Day ,Collector ,Durai Ravichandran ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...