×

அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்க சிறப்பு ஏற்பாடு

தென்காசி,ஜன.25: கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளை 26ம் தேதி கொண்டாடப்படப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை முழு வீச்சில் நடபெற்று வருகிறது. பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும், வணிக நிர்வாகத்தினரும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன் பெறும் வகையில் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் உட்பட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செய்யப்பட்டு உள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்க சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : TENKASI ,GOVILPATTI POST OFFICE ,75TH REPUBLIC DAY OF THE COUNTRY ,Dinakaran ,
× RELATED குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு