×

அங்கித் திவாரிக்கு காவல் நீட்டிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ₹40 லட்சம் லஞ்சம் வாங்கிய கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திண்டுக்கல் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து நீதிபதி மோகனா 3வது முறையாக அங்கித் திவாரியை வரும் பிப். 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

The post அங்கித் திவாரிக்கு காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Dindigul ,Madurai ,Madurai Central Jail ,doctor ,Suresh Bhabu ,Central Prison ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்