×

அரசு பேருந்து மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஓட்டுனர் படுகாயம் பயணிகள் 50 பேர் உயிர் தப்பினர்

செங்கல்பட்டு: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையோரமாக நின்று நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பயணிகள் ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநர் பெரியதம்பி (44), நடத்துனர் சுப்பையா (50) என பயணிகள் உட்பட மொத்தம் 52 பேர் இருந்தனர். இந்நிலையில், அரியலூரியில் இருந்து சென்னை ஆவடி நோக்கி டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் விருதாசலத்தை சேர்ந்த சந்துரு (24), பாண்டியன் (36) ஆகிய இருவர் இருந்தனர். இதில், சந்துரு வாகனத்தை ஓட்டி உள்ளார். அப்போது, மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்புறம் வேகமாக வந்த கனரக வாகனம் பயங்ரமாக மோதியதில் விபத்துக்குள்ளானது. அப்போது, கனரக வாகனத்தின் முன் பகுதி அப்பளம் போல் நொருங்கியது.

இந்த விபத்தில், பாண்டியன் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள பொத்தேரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சந்துரு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல அறிந்ததும், சம்பவ இடத்திற்க்கு மறைமலைநகர் குற்றபிரிவு ஆய்வாளர் விஜயக்குமார், உதவி ஆய்வாளர் மாரியப்பன் மற்று காவலர்கள் விரைந்து வந்தனர். பின்னர், பேருந்தில் இருந்த 50 பயணிகளை பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், மாற்று பேருந்து வரவைத்து பயணிகளை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட மொத்தம் 52 பேர் சிறு காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கனரக வாகன ஓட்டுநர் சந்துருவிடம் மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரசு பேருந்து மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஓட்டுனர் படுகாயம் பயணிகள் 50 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Pudukottai district ,Chennai ,GST road ,Chiramalai Nagar ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து...