×

ராணுவ வீரர் தற்கொலை

காஞ்சிபுரம்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் குகன் (29) இந்திய ராணுவ படையில் கமாண்டோவாக காஷ்மீர் எல்லை பகுதியில் பணியாற்றி வந்தார். இவருக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், விடுமுறையில் கடந்த 3ம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தபோது பூச்சி மருந்து குடித்துள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை குடும்பத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி குகன் இறந்தார். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப பிரச்னையால் ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ராணுவ வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Rajendran ,Kugan ,Ramachandrapuram ,Pallipattu ,Thiruvallur district ,Indian Army ,Kashmir ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...