×

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மனுவில் உள்ள ஆட்சேபனை கருத்துகளை நீக்கக்கோரி எடப்பாடி மனு

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ல் எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேத்யூ சாமுவேல் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மேத்யூ சாமுவேலின் பதில் மனுவில் பல இடங்களில் தவறான கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அவதூறு பரப்பும் வகையிலும், கொடநாடு வழக்கில் தனக்கு தொடர்பு உள்ளதாகவும் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், வேண்டுமென்றே அவதூறு பரப்பும் வகையில் பதில் மனுவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதி, மேத்யூ சாமுவேல் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மனுவில் உள்ள ஆட்சேபனை கருத்துகளை நீக்கக்கோரி எடப்பாடி மனு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Mathew Samuel ,Chennai ,Edappadi Palaniswami ,Delhi ,Kodanadu ,Sayan ,Valaiyar Manoj ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்