- மருத்துவத்தின் எதிர்காலம்”
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டாக்டர்
- எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்
- கலைஞர் நூற்றாண்டு சர்வதேச
- இந்தியா
- மருத்துவத்தின் எதிர்காலம்”
- எம் சுப்பிரமணியன்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் முதன்முறையாக கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 3 நாள் “மருத்துவத்தின் எதிர்காலம்” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் கீழ் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை 63,310 பேர் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் தங்களின் தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கும், ஆராய்ச்சி திறனை அதிகரிப்பதற்கும் இம்மாநாடு உதவியாக அமைந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் ஏதாவது ஒரு துறை சார்ந்து தான் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உலகில் முதன்முறையாக “மருத்துவத்தின் எதிர்காலம்” எனும் தலைப்பில் அனைத்து துறைகளும் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து 28 மருத்துவ நிபுணர்கள் உரை நிகழ்த்துவதற்கும், ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கும் வருகை புரிந்தார்கள். மொத்தம் 225 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்று கட்டுரைகள் மற்றும் உரைகளை சமர்ப்பித்துள்ளனர். 625 க்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் தொகுப்புகளும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற முதுநிலை மாணவர்களுக்கு 30 மதிப்பெண்களும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் 6 புள்ளிகளும், பல் மருத்துவ கவுன்சிலின் சார்பில் 16 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.
The post ‘மருத்துவத்தின் எதிர்காலம்’ மாநாடு 63,310 மருத்துவ மாணவர்கள் திறமையை வளர்க்க உதவும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை appeared first on Dinakaran.