×

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுக தடையாக உள்ள குறை சரி செய்யப்படும்: ஐகோர்ட்டில் சிஎம்டிஏ உத்தரவாதம்

சென்னை: கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தை மாற்றுத் திறனாளிகள் அணுக கூடிய வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த தணிக்கை குழு அறிக்கையில், சக்கர நாற்காலிகள் நுழைய இயலாத நிலை உள்ளிட்ட 17 விதமான குறைபாடுகள் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பில், இந்த பேருந்து நிலையத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு சிஎம்டிஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 7 குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான உத்தரவு வழங்கபட்டுள்ளது. மீதமுள்ள 10 பணிகளுக்கான டெண்டர் 2 மாதங்களில் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், அந்த பணிகளை திட்டமிட்டபடி முடிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர். பணிகள் நிறைவடைந்தது குறித்த அறிக்கையை மார்ச் 25 தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், மனுதாரர் தரப்பில், மாமல்லபுரம், கூத்தம்பாக்கம், வெண்பாக்கம், வரதராஜபுரம் ஆகிய நான்கு இடங்களில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த பேருந்து நிலையங்களிலும் மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்க வேண்டும் எனவும், கட்டுமான பணிகளை குழு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

The post கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுக தடையாக உள்ள குறை சரி செய்யப்படும்: ஐகோர்ட்டில் சிஎம்டிஏ உத்தரவாதம் appeared first on Dinakaran.

Tags : CMDA ,iCourt ,CHENNAI ,Vaishnavi Jayakumar ,Kalambakkam ,Chief Justice ,SV Gangapurwala ,Bharatha Chakraborty ,Glambakkam ,Dinakaran ,
× RELATED ₹12 கோடியில் நவீனமயமாகிறது அம்பத்தூர்...