×
Saravana Stores

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிடாம்பி, பிரணாய் அதிர்ச்சி தோல்வி

ஜகார்தா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி காந்த் அதிர்ச்சி தோல்வியை தழுவினர்.

பிரணாய் 18-21, 21-19, 10-21 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் லோ கீன் யிவூவிடம் வீழ்ந்தார். மலேசியாவின் லீ ஜி ஜியாவுடன் மோதிய கிடாம்பி 21-19, 14-21, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார். எனினும், சக இந்திய வீரர்கள் லக்‌ஷியா சென், கிரண் ஜார்ஜ் இருவரும் 2வது சுற்றுக்கு முன்னேறி ஆறுதல் அளித்தனர்.

The post இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிடாம்பி, பிரணாய் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Indonesia Masters Kidambi ,JAKARTA ,HS Pranai ,Kidambi ,Indonesia Masters Super 500 Badminton Series ,Pranai ,Singapore ,Lo Keen ,Indonesia Masters Kitambi ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவில் 109 அமைச்சர்கள் பதவியேற்பு