×

நிலக்கரி எரிவாயுவாக்கும் திட்டம் ரூ 8,500 கோடி ஊக்கத்தொகை: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.இதில்,நிலக்கரி எரிவாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ இந்தியாவில் எரிவாயு மயமாக்கல் தொழில்நுட்பத்தை ஏற்று கொள்வது, இயற்கை எரிவாயு,மெத்தனால், அம்மோனியா மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை நம்பியிருப்பதை வெகுவாக குறைக்கும் . இதனால் எரிவாயுவாக்கும் திட்டங்களுக்கு ரூ.8,500 கோடி ஊக்க தொகையை வழங்கும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 2030ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் நிலக்கரியில் இருந்து செயற்கையான இயற்கை எரிவாயு திட்டத்தை அமைப்பதற்காக கூட்டு முயற்சி திட்டம் மற்றும் நிலக்கரியில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் திட்டத்தை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மோடியை பாராட்டி தீர்மானம்
அமைச்சரவை கூட்டத்துக்கு பின் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்,‘‘ ஒன்றிய அமைச்சரவை தொடங்கியதும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமரை பாராட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்த தீர்மானம் அமைச்சரவையால் ஏற்று கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது’’ என்றார்.

The post நிலக்கரி எரிவாயுவாக்கும் திட்டம் ரூ 8,500 கோடி ஊக்கத்தொகை: ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,New Delhi ,Union Cabinet ,Modi ,India ,
× RELATED போக்சோ வழக்குகளை தீர்த்து வைப்பதில் தமிழ்நாடு சூப்பர்: ஒன்றிய அரசு தகவல்