×

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் எதிரொலி; இந்தியா, பிரான்ஸ், அமீரக நாடுகளின் விமான படை கூட்டு பயிற்சி

புதுடெல்லி: இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரக விமான படைகள் அரபிக் கடல் பகுதியில் பல்வேறு கூட்டு போர் பயிற்சிகளை மேற்கொண்டன. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் சர்வதேச கடல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய விமான படை, பிரான்ஸ் விமான படை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான படைகள் ஒருங்கிணைந்து 23,24 ஆகிய தேதிகளில் அரபி கடல் பகுதியில் டெசர்ட் நைட் எனப்படும் மாபெரும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இந்திய விமான படையின் சுகோய்-30 எம்கேஐ, மிக்-29, ஜாகுவார், அவாக்ஸ், சி-130-ஜெ விமானங்கள் ஈடுபட்டன.

பிரான்ஸ் சார்பில் ரஃபேல் போர் விமானங்கள், மல்டி ரோல் பீரங்கிகள் பயிற்சி மேற்கொண்டன. ஐக்கிய அரபு அமீரகத்தின் எஃப்-16 ரக விமானம் ஈடுபட்டது. மூன்று நாடுகளின் விமான படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதே டெசர்ட் நைட் பயிற்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் எதிரொலி; இந்தியா, பிரான்ஸ், அமீரக நாடுகளின் விமான படை கூட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Houthi attack on ,India ,France ,UAE ,New Delhi ,Arabian Sea ,Hamas ,Israel ,Red Sea ,United States ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...