×

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி திருவனந்தபுரத்தில் விற்பனையான டிக்கெட்டுக்கு ₹20 கோடி பரிசு

திருவனந்தபுரம்: கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ₹20 கோடி திருவனந்தபுரத்தில் விற்பனையான டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதன் முதல் பரிசு ₹20 கோடி XC 224091 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டை பாலக்காட்டைச் சேர்ந்த மொத்த வியாபாரியான ஷாஜகான் என்பவரிடமிருந்து திருவனந்தபுரத்தை சேர்ந்த துரைராஜ் என்ற லாட்டரி கடைக்காரர் வாங்கி விற்பனை செய்துள்ளார்.

துரைராஜ் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகே லாட்டரிக் கடை வைத்துள்ளார். சபரிமலை சீசன் என்பதால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தன்னுடைய கடையில் டிக்கெட் வாங்கியுள்ளதாக துரைராஜ் கூறினார். இம்முறை 45 லட்சம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி திருவனந்தபுரத்தில் விற்பனையான டிக்கெட்டுக்கு ₹20 கோடி பரிசு appeared first on Dinakaran.

Tags : Christmas ,New Year Bumper Lottery ,Thiruvananthapuram ,Kerala government ,New Year ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு...