×

பனிப் போர்வையில் ‘கொடை’ வனம்; 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை.! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உறைபனி ஏற்பட்டு 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இந்தாண்டு உறைபனி சீசன் காலதாமதாக தொடங்கியது. பின்னர்தட்பவெப்பநிலையால், உறைபனி சற்று குறைந்தது. தற்போது தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால், கொடைக்கானலில் 8 தினங்களுக்கு பிறகு மீண்டும் உறைபனி ஏற்பட்டுள்ளது. இதனால், கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் உறை பனி நிலவுகிறது. குறிப்பாக ஏரி சாலை மற்றும் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிறது.

கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர் மற்றும் உறைபனி இன்னும் பல தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். உறைபனி காரணமாக கொடைக்கானலில் மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பட்டாணி, கேரட், பீட்ரூட், நூல்கோல், முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, மலைப்பூண்டு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக பனிக்காலம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கி ஜனவரியில் குறைய தொடங்கும். ஆனால், தற்போது காலதாமதமாக தொடங்கிய பனி காலம் இந்த மாதம் முழுவதும் நீடிக்கும் என்று தெரிகிறது.

The post பனிப் போர்வையில் ‘கொடை’ வனம்; 4 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை.! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodai ,Kodaikanal ,Kodaikanal, Dindigul district ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை வரவேற்க பூத்து குலுங்குது போகன் வில்லா