×

அயோத்தி செல்வதை தற்காலிகமாக தவிர்க்க ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: அயோத்தி செல்வதை தற்காலிகமாக தவிர்க்க ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் உள்ளதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் சென்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படலாம் என்பதால் ஒன்றிய அமைச்சர்கள் மார்ச் மாதம் அயோத்திக்கு செல்லலாம் என பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் கடந்த 2019ல் அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சனைக்குரிய 2.7 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 2020ல் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதையடுத்து பணிகள் தொடங்கின. மொத்தம் 5 மண்டபங்களுடன் 3 அடுக்குகளாக ரூ.1800 கோடி செலவில் பணிகள் தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணியால் கோவிலில் முதல் தளம் முழுமையாக பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் கடந்த 18 ம் தேதி 5 வயது குழந்தை பருவ ராமர் சிலை கோவில் கருவறையில் நிறுவப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து முடிந்தது. நேற்று முதல் மக்கள் தரிசனத்துக்காக கோவில் திறக்கப்பட்டது. முதல் நாளில் அதிமான மக்கள் ராமர் கோயிலில் தரிசனத்துக்காக வந்தனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது . போலீசாரின் தடுப்புகளை தாண்டி மக்கள் கோயிலின் உள்ளே சென்றதால் அங்கு லேசான தடியடி நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அயோத்தியில் இருக்கும் ராமர் கோயிலை பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் பார்வையிட உள்ளனர். அமைச்சர்கள் பார்வையிட உள்ளதால் மக்களின் தரிசனம் தடைபடும். இதனால் பிரதமர் மோடி ஒன்றிய அமைச்சர்களுக்கு அயோத்தி செல்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என்றும் மார்ச் மாதம் அயோத்திக்கு செல்லலாம் என பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post அயோத்தி செல்வதை தற்காலிகமாக தவிர்க்க ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,EU ,Ayodhya ,Delhi ,PM ,Modi ,Union ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…