×

குமுளியில் வயதான தாயை பராமரிக்காதா மகன் மற்றும் மகளை பணியில் இருந்து நீக்கம்: கேரள அரசு உத்தரவு!!

கேரளா: வயதான தாயை பராமரிக்காதா மகன் மற்றும் மகளை வங்கி மற்றும் பஞ்சாயத்து பணியில் இருந்து நீக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. உயிரிழக்கும் தருவாயிலும் தாயை பார்க்க வராத மகன், மகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அட்டப்பள்ளம் காலனி பகுதியில் உள்ள தனியாக வசித்து வந்த விதவை தாய் நோய் வாய்ப்பட்டு உயிருக்கு போராடிய போதும் அவரது பிள்ளைகள் உதவிக்கு வராததால் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். விசாரணையில் அவரது பெயர் அன்னக்குட்டி என்பதும் 55 வயதில் ஷஜி என்ற மகனும், சிஜி என்ற மகளும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மகன் ஷஜியை போனில் பலமுறை போலீசார் தொடர்பு கொண்டபோது தாம் நாய்க்கு சாப்பாடு போட்டு கொண்டிருப்பதால் வரமுடியாது என்ற அவரது பதிலை கேட்ட போலீசாரே அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சில மணிநேரத்தில் மூதாட்டி உயிரிழந்த போதும் பிள்ளைகள் வராததால் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், போலீசார் இணைந்து இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பேருந்து நிலையம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னக்குட்டி உடலுக்கு ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது கூட்டத்தோடு கூட்டமாக அவரது மகன் ஷஜி தாயின் உடலை தூரத்தில் இருந்து பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் கேரள வங்கியில் ஊழியராக உள்ளார். மகள் பஞ்சாயத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். நிலம் தொடர்பான பிரச்சனையில் தயை நிர்கதியாக விட்டது தெரியவந்தது. வயதான தாயை பராமரிக்காமல் கைவிட்ட மகன் மீதும், மகள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் இருவரது பணியை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post குமுளியில் வயதான தாயை பராமரிக்காதா மகன் மற்றும் மகளை பணியில் இருந்து நீக்கம்: கேரள அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Kerala government ,Kerala ,Kumuli ,
× RELATED அதிகரிக்கும் வெயில்; கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை விடுமுறை!