×

பலாக்கொட்டை பொடிமாஸ்

தேவையானவை

பலாக்கொட்டை 200 கிராம்,
இஞ்சி ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் ஒன்று,
கடுகு,
உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிதளவு,
எண்ணெய்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை

பலாக்கொட்டையை நசுக்கி, தோல் உரித்து, உப்பு சேர்த்து, குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். வேகவைத்த பலாக்கொட்டையை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்த்துக் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும். பலாக்கொட்டையை சாம்பார், கூட்டு தயாரிக்க பயன்படுத்தலாம். மிதமான தீயில் சுட்டும் சாப்பிடலாம்.

The post பலாக்கொட்டை பொடிமாஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு