×

96வது ஆஸ்கர் விருது.. லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் பரிந்துரையில் 13 பிரிவுகளில் முன்னணி வகிக்கும் ஓபன்ஹெய்மர் ஆதிக்கம்..!!

வாஷிங்டன்: உலகளவில் திறத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் கிருஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. 96வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் அறிவிக்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடைபெற்றது.

சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹைமர்), ரியான் கோஸ்லிங் (பார்பி), ராபர்ட் டி நீரோ (கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்), ஸ்டெர்லிங் கே பிரவுன் (அமெரிக்கன் பிக்ஷன்), மார்க் ருஃபாலோ (புவர் திங்ஸ்) உள்ளிட்ட 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்), எமிலி பிளண்ட் (ஓப்பன்ஹைமர்), ஜோடி ஃபாஸ்டர் (நியாட்), அமெரிக்கா ஃபெரெரா (பார்பி), டேனியல் ப்ரூக்ஸ் (தி கலர் பர்பிள்) உள்ளிட்ட 5 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகர்: சிலியன் மர்பி (ஓபன்ஹெய்மர்), பிராட்லி கூப்பர் (மேஸ்ட்ரோ), ஜெஃப்ரி ரைட் (அமெரிக்கன் பிக்ஷன்), பால் கியாமட்டி (தி ஹோல்டோவர்ஸ்), கோல்மன் டொமிங்கோ (ரஸ்டின்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த நடிகை: லில்லி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்), எம்மா ஸ்டோன் (புவர் திங்க்ஸ்), கேரி முல்லிகன் (மேஸ்ட்ரோ), சாண்ட்ரா ஹுல்லர்(அனாடமி ஆஃப் எ ஃபால்), அனெட் பெனிங் (நியாட்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

முக்கிய பிரிவான சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோஃபர் நோலன் (ஓபன்ஹெய்மர்), மார்ட்டின் ஸ்கோர்செஸி (கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன்), யோர்கோஸ் லாந்திமோஸ் (புவர் திங்க்ஸ்), ஜொனாதன் கிளேசர் (தி ஜோன் ஆஃப் இன்டர்ஸ்ட்), ஜஸ்டின் ட்ரைட் (அனாடமி ஆஃப் எ ஃபால்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

சிறந்த திரைபடம்: ஓபன்ஹெய்மர், பார்பி, கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன், பாஸ்ட் லைவ்ஸ், புவர் திங்க்ஸ், ஹோல்டோவர்ஸ், அமெரிக்கன் ஃபிக்ஷன், மேஸ்ட்ரோ, தி ஜோன் ஆஃப் இன்டர்ஸ்ட், அனாடமி ஆஃப் எ ஃபால் உள்ளிட்ட 10 திரைப்படம் உள்ளன.

ஒட்டுமொத்தமாக 23 பிரிவுக்கான பரிந்துரைகளில் ஓபன்ஹெய்மர் திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் முதல் இடத்திலும், 11 பரிந்துரைகளுடன் புவர் திங்க்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 10 பரிந்துரைகளிடன் கில்லர்ஸ் ஆஃப் தி ஃபளவர் மூன் படமும், 8 பரிந்துரைகளுடன் பார்பியும் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. இந்தியாவில் ஜார்கண்டில் 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கனடா நாட்டின் ‘To Kill A Tiger’ என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது.

The post 96வது ஆஸ்கர் விருது.. லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் பரிந்துரையில் 13 பிரிவுகளில் முன்னணி வகிக்கும் ஓபன்ஹெய்மர் ஆதிக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : 96th ,Awards ,Los Angeles ,WASHINGTON ,Christopher Nolan ,Oppenheimer ,Los ,Dinakaran ,
× RELATED ஹாலிவுட்டில் எனது இருண்ட காலம்: பிரியங்கா சோப்ரா பிளாஷ்பேக்