×

வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் பள்ளி சத்துணவு மையங்களுக்கு பாத்திரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்

திருவாரூர்: மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொருளாளர் சேக் அப்துல்லா தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் அப்துல் சலாம்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயினுதீன் மற்றும் பொறுப்பாளர்கள் ஆசிப், நஜீம், ஜான், சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் புதிய மாவட்ட அவைத்தலைவராக சீனிஜகபர் சாதிக், மாவட்ட செயலாளராக ஷேக் அப்துல்லா, பொருளாளராக ரஹ்மத்துல்லா மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தமிழகத்தில் நீண்ட காலமாக சிறைகளில் இருந்து வரும் சிறை கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 10ம்தேதி திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 100 வாகனங்களில் அதிகம் பேர் கலந்து கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம் பள்ளி சத்துணவு மையங்களுக்கு பாத்திரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Human Democratic Party ,Thiruvarur District Executive Committee ,Thiruvarur ,executive ,Sheikh Abdullah ,Deputy Secretary of State ,Abdul Salam ,Chief Executive Committee ,Zainuddin ,Asif ,Najeem ,John ,Siddiqui ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்