×

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் அதிரடி கைது

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி வருகையால் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று நாட்கள் கடலுக்கு செல்லவில்லை. பிரதமர் சுற்றுப்பயணம் முடிந்ததையடுத்து, நேற்று முன்தினம் காலை ஏராளமான விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவு பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ஐசக், ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் ஆகியோரின் விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர். படகுகளில் இருந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் சமாதான பாபு(38), சிசேரியன்(43), ஐசக்(47), நிலாந்தன்(34), ஆரோக்கியதாஸ்(43), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசத்தால் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Modi ,Bagjalasandi sea ,
× RELATED நாளையுடன் மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்