×

தகர ஷெட்டை உடைத்த யானைகள் கைக்குழந்தையுடன் தப்பிய குடும்பம்

பெ.நா.பாளையம்: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வசித்து வருகின்றன. நேற்று அதிகாலை கோவை அருகே துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் கிரீன்பீல்டு குடியிருப்பு பகுதிக்குள் 3 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு கட்டிட பணியாளர்கள் தகர ஷெட் அமைத்து அதில் தங்கி இருந்தனர். அந்த யானைகள் தகர ஷெட்டை உடைத்தெறிந்தன. அப்போது அருகில் இருந்தவர்கள் யானைகள் மீது டார்ச் லைட் அடித்து அவர்கள் உயிர் தப்பிக்க வழியை கூறினர். அதன்படி, யானைகள் நின்ற இடத்தின் மறுபக்கம் வழியாக கைக்குழந்தையுடன் உயிர் தப்பினர். அவர்கள் வெளியேறுவதை பார்த்த ஒரு யானை அவர்களை தாக்குவதற்காக செல்ல முயன்றது. அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே னை பின்வாங்கி சென்று தொடர்ந்து ஷெட்டை பலமாக தாக்கியது. இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

The post தகர ஷெட்டை உடைத்த யானைகள் கைக்குழந்தையுடன் தப்பிய குடும்பம் appeared first on Dinakaran.

Tags : B.N. Palayam ,Western Ghats ,Coimbatore ,Kathirnayakanpalayam ,Dudiyalur ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...