×

பாஜவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: முதல்வர் பேச்சு

சென்னை: திமுக பொரு­ளா­ளர் நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வர் டி.ஆர்.பாலு எழு­திய ‘உரி­மைக்­கு­ரல்’, ‘பாதை மாறா பய­ணம்’ ஆகிய நூல்­கள் வெளி­யீட்டு விழா சென்னை அண்ணா அறி­வா­ல­யம் கலை­ஞர் அரங்­கில் நேற்று நடந்தது. வி­ழா­விற்கு திமுக தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யேற்று, நூல்­களை வெளி­யிட்டார். அமைச்­சர் துரைமு­ரு­கன் முன்­னிலை வகித்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பா.ஜ.வை வீழ்த்தப் போகும் இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் பாலுவிற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. தேர்தலைச் சந்திக்க இருக்கும் பாஜவிற்கு மக்களிடம் சொல்வதற்கு சாதனை என்று எதுவும் இல்லை. அதனால் தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்து விட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இதுமாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி.

எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பாஜ ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப்பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும். தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் வரலாற்றைச் சொல்ல, திமுக வரலாற்றை, தலைவர் கலைஞரின் வரலாற்றை, இந்தத் திராவிட மாடல் அரசின் வரலாற்றைத் தொடர்ந்து கழகத்தினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இவ்விழா­வில் முதன்­மை செய­லா­ளர் அமைச்­சர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செய­லா­ளர் கனி­மொழி எம்.பி., இளை­ஞர் அணிச் செய­லா­ளர், அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் வாழ்த்தி பேசினர். அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி வர­வேற்­பு­ரை­யாற்­றினார். பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு ஏற்­பு­ரை­யாற்­றினார். ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.

The post பாஜவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chief Minister ,CHENNAI ,DMK ,Treasurer ,Parliamentary ,DMK Committee ,President ,DR ,Balu ,Anna Vithalayam Artist Arena ,chief Chief Minister ,M.K.Stalin ,
× RELATED சொல்லிட்டாங்க…