×

சில்லி பாயின்ட்…

* ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), யானிக் சின்னர் (இத்தாலி) தகுதி பெற்றனர். மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு அமெரிக்காவின் கோகோ காஃப், அரினா சபலெங்கா (பெலாரஸ்) முன்னேறினர்.
* இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான 2வது போட்டிக்கான (4 நாள் ஆட்டம்) இந்தியா ஏ அணியில் அதிரடி வீரர் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டி அகமதாபாத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.
* மகளிர் ஐபிஎல் 2024 தொடர் பெங்களூருவில் பிப்.23ம் தேதி தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் மோதுகின்றன.
* பிசிசிஐ வருடாந்திர விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டரும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரிக்கு, கர்ணல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, சுப்மன் கில், முகமது ஷமி, ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் சிறந்த சர்வதேச வீரர்/வீராங்கனைக்கான போலி உம்ரிகர் விருது பெற்றனர்.
* கேலோ இந்தியா இளைஞர் தடகளம் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வீரர் எம்.சரண், பந்தய தூரத்தை 48.42 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். கர்நாடகாவின் துருவா பல்லால் (49.06) வெள்ளி, தெலங்கானா வீரர் ஷேக் அசாருதீன் (49.15 விநாடி) வெண்கலம் வென்றனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Aussie ,Novak Djokovic ,Serbia ,Yannick Sinner ,Italy ,Open Tennis Series ,America ,Coco Goff ,Arina Sabalenka ,Belarus ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்