×

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி திடீர் ராஜினாமா

திருமலை: நரசராவ்பேட்டை நாடாளுமன்ற தொகுதி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி கிருஷ்ணதேவராயலு திடீரென எம்பி பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியில் இருந்தும் விலகி உள்ளார். ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பியாக இருப்பவர் கிருஷ்ணதேவராயலு. நடைபெற உள்ள தேர்தலில் நரசாராவ்பேட்டை தொகுதியில் புதிய வேட்பாளரை நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதனால், கிருஷ்ண தேவராயலு எம்பி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதோடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

The post ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : YSR Congress ,THIRUMALI ,KRISHNADEVARAYALU ,AP ,Balnadu District ,Narasarawpettai ,Y. S. R. ,M. Kṛṣṇadevarayal ,P. ,Dinakaran ,
× RELATED அண்ணன் ஜெகனின் ஆட்சியை கவிழ்த்த தங்கை: சர்மிளாவும் தோல்வி