×

கடலூர் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு துவங்கியது

கடலூர்: கடலூர் கடற்கரை பகுதியில் ஆலிவ் ரெட்லி ஆமை வகைகளின் முட்டை சேகரிப்பு பணிகள் துவங்கியது. நடப்பாண்டில் தமிழக அளவில் கூடுதலாக முட்டைகள் சேகரிப்பு பணி தீவிர படுத்த நடவடிக்கை வனத்துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆமை வகைகளில் அழிந்து வரும் நிலைப்பாட்டில் உள்ளது ஆலிவ் ரெட்லி வகை .இவ்வகை ஆமைகள்  முட்டையிட்டு அதன் மூலம் இனப்பெருக்கத்தை தீவிர படுத்த நடவடிக்கை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கு ஏற்ற வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இவ்வகை ஆமைகள் ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை முட்டையிட்டுச் செல்வது வழக்கம். இதுபோன்று ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அதனை பாதுகாத்து முட்டைகளை பொரித்து மீண்டும் ஆமைக்குஞ்சுகள் கடலில் விட்டு வருவதை வனத்துறையினர் சில வருடங்களாக பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற நிலைப்பாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 10,000 முட்டைகள் வரை சேகரிக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் ஆலிவ் ரெட்லி  வகை ஆமைகள் கடலூர் கடற்கரைப் பகுதியில் முட்டையிட்டு செல்லும் நிலையில் அதனை சேகரிக்கும் பணியில் சமூக ஆர்வலர்களுடன் வனத்துறையினர் தீவிரப் படுத்தி உள்ளனர் .கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் இதற்காக பிரத்தியேகமாக ஆமை முட்டைகள் சேகரிப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டு அதனுள் சம்பந்தப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் தமிழக அளவில் கடலூர் கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரெட்லி வகை ஆமைகளின் முட்டைகள் அதிகளவில் சேகரித்து ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் பணியை மேற்கொள்ள வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதுவரையில் சுமார் 3000 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

The post கடலூர் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Beach ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!