×

பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,053 புள்ளிகள் சரிந்து 70,371 புள்ளிகளாக வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.8லட்சம் கோடி இழப்பு

மும்பை: காலையில் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம் மாலையில் பெரும் சரிவுடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 561 புள்ளிகள் உயர்ந்து 71,984 புள்ளிகளில் காலை வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 21,732 புள்ளிகளில் வர்த்தகமாகியது. இந்நிலையில் காலையில் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம் மாலையில் பெரும் சரிவுடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,053 புள்ளிகள் சரிந்து 70,371 புள்ளிகளாக வீழ்ச்சியடைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 333 புள்ளிகள் சரிந்து 21,239 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. ரிலையன்ஸ், எச்.டி.எஃப்.சி., எச்.யூ.எல். பங்குகள் 2%லிருந்து 4%வரை சரித்ததால் பங்குச்சந்தை குறியீட்டு எண் 1.47% சரிவடைந்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரேநாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கித்துறை பங்குகள், நுகர்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள், உலோக நிறுவனப் பங்குகள் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இண்டஸ்இண்ட் வங்கி பங்கு 6%, கோல் இந்தியா பங்கு 5.5%, எஸ்.பி.ஐ. லைஃப், ஓ.என்.ஜி.சி. பங்குகள் தலா 4.5% சரிவடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ. பங்குகள் தலா 4%, பி.பி.சி.எல். பங்கு 3.9%, இந்துஸ்தான் யுனிலீவர் பங்கு 3.8% சரிவடைந்தது. ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி பங்கு தலா 3%, பஜாஜ் பைனான்ஸ் 2,9%, டாடா ஸ்டீல் பங்கு 2.8% விலை குறைந்து.

The post பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,053 புள்ளிகள் சரிந்து 70,371 புள்ளிகளாக வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.8லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,MUMBAI ,Nifty ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!