×

அமெரிக்காவில் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 98% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 98% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 7,21,677 பேர் வேலையை இழந்துள்ளனர். 2022ம் ஆண்டு 3,63,832 பேர் அந்நாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இது 98% அதிகரித்துள்ளது. மெட்டா, அமேசான் போன்ற ஐ.டி. நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கை அதிகரித்துள்ளதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐடி நிறுவனங்களில் கடந்த ஆண்டு 1,68,032 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 73% அதிகமாகும். சில்லறை விற்பனை நிறுவனங்களில் கடந்த ஆண்டு 78,840 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது 2022ம் ஆண்டை விட 274% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து 2023ம் ஆண்டில் 58,560 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 91%அதிகமாகும். அமெரிக்காவில் மொத்தம் 34% ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை என்றும் 2022ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 27% ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வழங்கும் ஊதிய செலவை குறைப்பதற்காக நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் நடப்பாண்டு பணி நீக்க நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 98% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,Dinakaran ,
× RELATED டிரம்ப் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு