×

கீழ்பேட்டை ஊராட்சியில் பைப்லைன் உடைந்து வீணாக சாலையில் ஓடும் குடிநீர்

*சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மரக்காணம் : மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழ்பேட்டை ஊராட்சி. இங்குள்ள விநாயகர் கோயில் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களுக்கு தினமும் பைப்லைன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தெருவில் செல்லும் குடிநீர் பைப் லைன்களில் ஒரு சில இடங்களில் பைப்புகள் உடைந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடைந்த பைப்புகளை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரையில் எந்தப் பலனும் இல்லையென குறை கூறுகின்றனர். இதுபோல் பைப்புகள் உடைந்து குடிநீர் தினமும் சாலையில் ஓடுவதால் அவ்வழியாக வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளில் கழிவுநீர் கலந்துவிட்டால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பல இடங்களில் உடைந்துள்ள பைப்புகளை உடனடியாக சரி செய்ய வட்டார வளர்ச்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கீழ்பேட்டை ஊராட்சியில் பைப்லைன் உடைந்து வீணாக சாலையில் ஓடும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Kilipettai ,Marakanam ,Kilipetta Panchayat ,Marakanam Union ,Vinayagar Koil Street ,panchayat ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...